தமிழ்நாடு அரசின் வெல்லும் தமிழ்ப்பெண்கள் நிகழ்வில். இந்திய ராணுவத்தில் செவிலியர் பிரிவில் முதல் பெண் மேஜர் ஜெனரல் ஃப்ளரோ இக்னேஷியஸ் (தற்போது பணி ஓய்வு) தமிழக அரசின் வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்வில் பங்கேற்றவர்.


தமிழக முதல்வர், துணை முதல்வர்,சாதனை பெண்கள் மற்றும் இன்றைய இளைய சமூகம் பெண்கள் நிறைந்த நிகழ்வில் பேசியது. இந்திய ராணுவம் செவிலியர் பிரிவில் முதல் பெண் மேஜர் ஜெனரல் வெளிப்படுத்திய சாதனை தடங்களுக்கு காரணம். தன்னம்பிக்கை,விடா முயற்சி.

இந்தியாவின் தென்கோடி குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் ராஜாவூரில் பிறந்து வளர்ந்த நான். தோப்பூர் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவள். 12_ம் வகுப்பில் வெற்றி பெற்றபின்.
டெல்லியில் உள்ள இந்திய ராணுவத்தின் செவிலியர் பள்ளியில்.1982_ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 29_ம் தேதி செவிலியர் பிரிவில் பயிற்சியில் சேர்ந்தேன். டிசம்பர் டெல்லி குளிர் முதலில் என் உடலையும், உள்ளத்தையும் தாக்கினாலும். என் நெஞ்சில் நம்பிக்கை என்னும் நெருப்பு கனல்,எனது எதிர்கால கனவை நோக்கிய பயணத்திற்கு வழி நடத்தியது.

இந்திய ராணுவத்தின் செவிலியர் பிரிவில் முதல் பெண் மேஜர் ஜெனரல் ஃப்ளரோ இக்னேஷியஸ் என்ற பதவி உயர்வு பணியை சென்னை தலைமை இராணுவ
அலுவலகத்தில் 2023_ம் ஆண்டு பதவி பெற்றதை இராணுவத்தின் செய்தி பதிவேட்டில் வெளியான செய்தியை பார்த்த நம் முதல்வர் ஸ்டாலினின். ஒரு தமிழ் பெண், இந்திய ராணுவம் செவிலியர் பிரிவில் முதல் பெண் மேஜர் ஜெனரல் என்ற செய்தி அறிந்து மகிழ்ச்சி, வாழ்த்துகள் சொன்ன அடுத்த நெடியில் ராஜாவூர் என்ற சிறிய கிராமத்தில் உள்ள என் வீட்டு முற்றத்தில் ஊடகம் மற்றும் தினசரிகளின் செய்தியாளர்கள் கூடி ஒரு தமிழ் பெண் க்கு கிடைத்த பெருமை தமிழகத்தின் பெருமை, குமரியின் பெருமை எனது ஊரான ராஜாவூருக்கு கிடைத்த தனித்த பெருமை உணர்வை இன்று பெண் ‘சக்திகள்’ முதல்வர் முன் நின்று நன்றி என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிட முடியாத
பெருமிதத்தை நம் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.




