மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி ஆன்மிக குருவாக விளங்கி வந்தவர் பங்காரு அடிகளார். அவருக்கு வயது 82. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அருகே உள்ள ஆதிபராசக்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை 5.45 மணி அளவில் பங்காரு அடிகளாரின் உயிர் பிரிந்தது. இதையறிந்த முதலமைச்சர் ஸ்டாலின் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரது இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்தார்.
பங்காரு அடிகளார் மறைவு செய்தி கேட்டு, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பெண் பக்தர்கள் சாரை சாரையாய் திரண்டு வந்து அடிகளார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பங்காரு அடிகளார் மறைவுக்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி..!






; ?>)
; ?>)
; ?>)
