• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தொகுதி மறுசீரமைப்பு- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

ByP.Kavitha Kumar

Apr 2, 2025

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,, “கடந்த மார்ச் 22, 2025 அன்று, சென்னையில் ‘Fair Delimitation ‘ குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. இது இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியத் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்.

இந்த கூட்டத்தில் எங்கள் ஆலோசனை மூலம் எழும் குரல்கள் அரசியலை கடந்து, நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நியாயமான பிரதிநிதித்துவத்தை நாடும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குடிமக்களின் கவலைகளைப் பற்றியது. எனவே, இந்த விவகாரம் நமது மாநிலங்களுக்கும் குடிமக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் மனுவை முறையாக சமர்ப்பிக்க உங்களுடனான சந்திப்பு வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். விரைவில் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.