• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவைக்கு நாளை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.., நிகழ்ச்சி நடைபெறும் அரசு கலை கல்லூரி வளாகத்தை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு…

BySeenu

Aug 8, 2024

கோவைக்கு நாளை வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டத்தை துவக்கு வைக்க உள்ள நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் அரசு கலை கல்லூரி வளாகத்தை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கோவையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை விமானம் மூலம் கோவைக்கு வருகை தர உள்ளார்.

நாளை காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் அவருக்கு கோவை விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பின்னர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அப்போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது. இதன் காரணமாக இலட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைய உள்ளனர். இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெற உள்ள அரசு கலை கல்லூரி வளாகத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்..