கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளைக்கு பாராளுமன்றத்தில் சிலை அமைக்க வேண்டும். பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் .தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வ உ சிதம்பரம் பிள்ளை பெயர் வைக்க வேண்டும். தமிழக அரசு பெரம்பூரில் வ உ சி வசித்த வீட்டை பராமரித்து நினைவு மண்டபமாக மாற்ற வேண்டும் என நான்கு கோரிக்கைகளை ஏ சி சண்முகம் முன் வைத்தார் பேசினார்.

இராஜபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழன்
வ உ சிதம்பரம் பிள்ளைக்கு 20 லட்சம் செலவில் 11 அடியில் வெங்கல சிலை வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் . அனைத்து உலக முதலியார் வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் ஏ சி சண்முகம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலையில் பஞ்சு மார்க்கெட் அருகே ராஜபாளையம் பழைய பாளையம் வீரக்கொடி வெள்ளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இடத்தில் கப்பலோட்டிய தமிழன் பாபு சிதம்பரம் பிள்ளைக்கு 20 லட்சம் செலவில் 11 அடி வெங்கல சிலை வைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அனைத்து உலக முதலியார் வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ சி சண்முகம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் இராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷாயம் .வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநில நிறுவனத் தலைவர் அண்ணா சரவணன் .வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அனைத்து சமுதாய பெரியவர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை வீரகுடி வெள்ளாளர் உறவின்முறை தலைவர் மணிகண்டன் செயலாளர் மாரியப்பன் என்ற பாபு பொருளாளர் குருசாமி டால்பின் முருகதாஸ் ஆகியோர் செய்திருந்தனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஏசி சண்முகம் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளைக்கு பாராளுமன்றத்தில் சிலை அமைக்க வேண்டும். பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வ உ சிதம்பரம் பிள்ளை பெயர் வைக்க வேண்டும். தமிழக அரசு பெரம்பூரில் வ உ சி வசித்த வீட்டை பராமரித்து நினைவு மண்டபமாக மாற்ற வேண்டும் என நான்கு கோரிக்கைகளை ஏ சி சண்முகம் முன் வைத்தார் பேசினார்.













; ?>)
; ?>)
; ?>)