• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி

ByG.Suresh

May 28, 2024

மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் ஏழை எளிய மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுச்செயலாளர் அண்ணன் திரு.புஸ்ஸி N.ஆனந்த் (Ex.MLA) அவர்களின் வழிகாட்டுதலின் படி, பொதுமக்கள் 100 பேருக்கு சிக்கன் பிரியாணி, முட்டை, ஐஸ்கிரீம், குடிநீர் பாட்டில், ஆகியவற்றை மாவட்ட வழங்கினார். இதில் தமிழக வெற்றிக்கழக சிவகங்கை மாவட்ட தலைவர் முத்து பாரதி , மாவட்ட செயலாளர் காளீஸ்வரன் , மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் , மற்றும் நகர நிர்வாகிகள் தலைவர் தாமரை பாண்டியன் , செயலாளர் கோபி , பொருளாளர் சிவா , இணை செயலாளர் மகேஷ் மற்றும் கழகத் தோழர்கள் தினேஷ், அருண், முத்துப்பாண்டி, கார்த்தி, முத்து, காலிஸ் , சிவா அகமது, நவீன், சதீஷ், மூர்த்தி மகளிர் அணி தமிழரசி, மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.