சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 14 மாதந்தோறும் நடக்கும் மண்டல குழு கூட்டம் நடைபெற்றது.
சென்னை புழுதிவாக்கம் சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 14 மாதந்தோறும் நடக்கும் மண்டல கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாதைகளில் உள்ள குறைகளை மண்டல குழு தலைவரிடம் தெரிவித்தார்கள். இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை குறித்து மண்டல குழு தலைவரிடம் தெரிவித்தனர். இதை மண்டல குழு கேட்டறிந்து அந்தந்த துறைகளை சம்பந்தப்பட்டவர்களை அணுகி தண்ணீர் பிரச்சனை, கழிவுநீர் கால்வாய் பிரச்சனை, சாலை பிரச்சனைகள், மின்சார பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் என்று அந்தந்த துறைகளின் அதிகாரிகளிடம் உடனே சரி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த சிறப்பு வாய்ந்த கூட்டத்தை மண்டல குழு தலைவர். ரவிச்சந்திரன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், சர்மிளா தேவி, திவாகர், ஷெர்லி ஜெய், சாமினா செல்வம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்தினார்கள்.
