• Thu. Sep 25th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார் சவுக்கு சங்கர்…

Byகாயத்ரி

Sep 24, 2022

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. நீதித்துறையை பற்றி அவதூறாக பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் உள்ளார் சவுக்கு சங்கர். கடந்த ஜூலை 22-ம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது என்று ஒரு யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டனர். அதன்படி, சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் உள்ளார். இந்த நிலையில், ஏற்கனவே அரசு பணியில் இருந்து சவுக்கு சங்கர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நிரந்திரமாக நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகத்தில் பணிபுரிந்தவர் சவுக்கு சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.