தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள டைனி பார்க் கிட்ஸ் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஜமாத் இஸ்லாமிய ஹிந்த் அமைப்பு மற்றும் வானவில் தொண்டு அறக்கட்டளை சார்பாகவும் மரக்கன்றுகள் வழங்கி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் இந்த விழாவில் காமராஜர் அவர்களைப் பற்றிய பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டியும் நடைபெற்றது. பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் காமராஜர் போல் உடை அணிந்து பேச்சு போட்டியில் கலந்து கொண்ட குழந்தை அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன அமைப்பின் நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.