• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

6 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

Byவிஷா

Sep 27, 2023

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தொடங்க உள்ள நேரத்தில், தற்போது அதற்கு முன்னதாக பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. நேற்று சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாகவும், போரூர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கொளத்தூர், நந்தம்பாக்கம், ஆலந்தூர், அசோக் நகர், வடபழனி, என பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.
நேற்று இரவு சென்னை தவிர திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் வாணியம்பாடி பகுதியில் மழைநீர் தேங்கிய பள்ளத்தில் தவறுதலாக இரண்டு சிறுமிகள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல் இன்று வெளியான தகவலின் படி தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.