பழனி மலைக் கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.

தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த பிரசாதம் வழங்கும் திட்டத்தில் சாம்பார் சாதம் வெண்பொங்கல் லெமன் சாதம் காய்கறிகள் என தினம் ஒரு உணவு வழங்கப்பட உள்ளது. ஆண்டிற்கு நான்கு கோடி ரூபாய் செலவில் துவக்கப்பட்டுள்ள திப்பத்தின் மூலம் வருடம் முழுவதும் 25 லட்சம் பக்தர்கள் பயனடைவார்கள். மேலும் இத்திட்டத்தின் மூலம் பழனி மலைக் கோயிலில் வழங்கப்படும் அன்னதானத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைவதால் பக்தர்கள் சிரமமின்றி உணவருந்தி செல்வர்.

அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் நாள் ஒன்றுக்கு 25000 ரூபாய் செலுத்தி தங்கள் திருமண நாள் பிறந்தநாள் உள்ளிட்ட தினங்களில் பயனடையலாம். இத்திட்டத்தால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழனி மலை கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்