• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நூற்றாண்டு பழமையான சாஸ்த்தா கோயில் கும்பாபிஷேகம்.

நாகர்கோவில் அடுத்த பறக்கை பகுதியில் அமைந்துள்ள கூறுடைய கண்டன சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலானது பல நூறு வருட பழமை வாய்ந்த கோவில். இந்த கோவில் பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. இந்த கோவிலை விவசாயிகள் மூலம் பூஜைகள் செய்து வழிபட்டு வந்த கோவில் அறநிலை துறைக்கு சொந்தமானது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், மாநகராட்சி மேயர் மகேஷ் அவரது துணைவியருடன் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார் பின்னர் அன்னதான நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைத்தார் இதில் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார், மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், வட்டார தலைவர் அசோக்ராஜ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினபாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.