• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோவில் கும்பாபிஷேக விழா

ByP.Thangapandi

Sep 15, 2024

உசிலம்பட்டி அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனாசாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொறுப்பு மேட்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது நூற்றாண்டு பழமைவாய்ந்த பெத்தனசாமி, சின்னகருப்பசாமி, வீர கொண்டம்மாள் சாமி திருக்கோவில்.

இந்த கோவிலில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேக விழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக கடந்த 13ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கி மூன்று கால யாக பூஜைகளை செய்த சிவாச்சாரியார்கள், இன்று கோவிலின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

பின்னர் கருவறையில் உள்ள பெத்தனசாமி, சின்னகருப்பசாமி, வீர கொண்டம்மாள் சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த கும்பாபிஷேக விழாவில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக தரிசனம் செய்தனர்.