• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

நேருவின் இந்தியா என பேசிய சிங்கப்பூர் பிரதமருக்கு மத்திய அரசு சம்மன் !

நேருவின் இந்தியா என சிங்கப்பூர் பிரதமர் பேசியதை அடுத்து சிங்கப்பூர் தூதரகத்திற்கு இந்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் என்பவர் பேசியபோது இந்தியா குறித்து நேருவின் இந்தியா என குறிப்பிட்டார் இதனை அடுத்து சிங்கப்பூர் தூதருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்திய ஜனநாயகம் குறித்த சிங்கப்பூர் பேசியபோது, இந்திய மக்களவையில் பாதி எம்பிக்கள் மீது கற்பழிப்பு மற்றும் கொலை உள்பட கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் அவை அரசியல் ரீதியானவை என்று கூறப்பட்டாலும் கூட’ என்று அவர் குறிப்பிட்டு உள்ளார் அவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்காக தான் இந்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.