• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாலமேடு மேடு அருகே மயான வசதி

ByKalamegam Viswanathan

Nov 27, 2024

மதுரை, பாலமேடு அருகே, வளையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதி
திராவிடர் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மயான வசதி கேட்டு, வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் யூனியன், வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதி
திராவிடர் பொதுமக்கள் 50அ-க்கும் மேற்பட்டோர் மயான வசதி வேண்டி, வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் .
இது குறித்து அதில் பொதுமக்கள் கூறுகையில்: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வலையப்பட்டி கிராமத்தில், ஆதிதிராவிடர்களுக்கான தனியாக மயானம் இல்லாததால், இறந்தவர்களை அடக்கம் செய்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

குறிப்பாக, மஞ்சமலை ஆற்றுப்பகுதியில், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக செல்லும்போது மழை காலங்களில் தண்ணீர் வருவதால், இறந்தவர்களை எரியூட்டுவதில் சிரமம் ஏற்படுகிறது. புதைக்கவும் முடியாமல், பல நேரங்களில் இறந்தவரின் உடலை மஞ்சமலை ஆற்றின் கரையோரம் புதைக்கவும் எரிக்கவும் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலங்காநல்லூர் யூனியன் ஆணையர் ஆகியோரிடம் பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, சுமார் 120க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் வசிக்கும் வலையபட்டி கிராமத்தில், பொது இடத்தில் தனியாக மயானம் அமைத்து தர வேண்டுமென, வாடிப்பட்டி வட்டாட்சியர் அவர்களிடம் தற்போது மனு அளித்திருக்கிறோம். இது குறித்து, மாவட்ட ஆட்சியர் விரைந்து முடிவெடுத்து எங்களுக்கு மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.