• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்பதாக செல்லூர் ராஜூ பேச்சு

Byகாயத்ரி

Nov 26, 2021

கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம்…வாழ்த்துகிறோம் என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ; 2026 சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களை பெற்று தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்கும் என என அண்ணாமலை கூறி இருப்பது அவரது ஆசை, விருப்பம். ஒருவரின் ஆசையை நாம் நிராகரிக்க முடியுமா ..? ஆனால் எப்போது தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் அதிமுக வெற்றிபெறும் என்பதற்கு சான்று இது.
பாஜக ஒரு வளர்கின்ற கட்சி, பாஜகவினர் தங்கள் கட்சி வளர எதிர்க்கட்சி என சொல்லிக்கொள்வார்கள்.

மக்களின் பேராதரவோடு அதிமுக தான் எதிர்க்கட்சியாக தமிழகத்தில் உள்ளது. பணபலம், அதிகார பலம் 2-வது பட்சம் மக்கள் பலம் தான் முக்கியம். ஒரு தேர்தலில் ஜனநாயகத்தை நிலைநாட்ட மக்கள் விரும்பி வாக்களிக்க வேண்டும். ஜனநாயக அடைப்படையில் தேர்தல் நடைபெற வேண்டும். எந்தவிதமான அதிகார துஷ்பிரயோகம் இல்லாமல் தேர்தலை முதல்வர் நடத்துவர் என நினைக்கிறோம். தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் உணவகம் வந்தால் வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம் என தெரிவித்தார்.