மதுரை மாநகர் பெரியார் பகுதியில் நகரின் முக்கிய சந்தைகளில் ஒன்றான மீனாட்சி பஜார் செயல்பட்டு வருகிறது இங்கு செல்போன்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை விற்பனை செய்யும் 183 கடைகள் அமைந்துள்ளன.
இந்நிலையில் இன்று அங்குள்ள கடைகளில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்ட நிலையில் வழக்கம் போல கடையின் உரிமையாளர்கள் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் திடீரென பஜாரில் அமைந்துள்ள செல்போன் விற்பனை கடை ஒன்றில் தீப்பிடித்து வேகமாக எரிந்து அடுத்தடுத்து உள்ள கடைகளில் பரவத் தூங்கியது இது தொடர்பாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியார், மீனாட்சி அம்மன் கோவில், தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு தீயணப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் கடை ஒன்றிலிருந்து பொருள்கள், செல்போன்கள் முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தன. அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்துதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக திடீர் நகர் காவல் துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் செல்போன் கடை ஒன்றில் இன்று ஆயுத பூஜையை கொண்டாடிவிட்டு விளக்கை கடையின் உரிமையாளர் அணைக்காமல் அப்படியே சென்றதால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
மாநகரின் மையப்பகுதியிலும் மீனாட்சியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள மீனாட்சி பஜாரில் ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு அணைக்காமல் சென்ற விளக்கால் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
