புதுச்சேரி முதலமைச்சர் என்.ரெங்கசாமியின் 75-வது பிறந்த நாள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால், திருப்பட்டினம் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தொகுதி பொதுச் செயலாளர் என்.ஜி.விஜயகுமார் ஏற்பாட்டில் திருப்பட்டினம் விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுமார் 1500 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவையும் 300-க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வேட்டி சட்டையும் அன்னதானமும் வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பட்டினம் தொகுதி என்.ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
