மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது
மதுரை சர்வேயர் காலனி பகுதியில் அமைந்துள்ள பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் அலுவலகத்தில் நிறுவனத்தின் எட்டாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. துவக்க விழாவை முன்னிட்டு, ஏழை எளியோருக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது விழாவினை மேட்ரிமோனியின் நிறுவனர் முகமது பாரூக் தொடங்கி வைத்து அன்னதானத்தை வழங்கினார் விழாவில் மாணிக்கம், கணேஷ் மற்றும் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் முகமது பாரூக் கூறியது.., மேட்ரிமணியின் எட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஏழை எளியவருக்கு அன்னதானம் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். அதேபோல் மேட்ரிமோனியின் சார்பில் வரதட்சணை இல்லாமல் 1200 பேருக்கு நிக்காஹ் செய்து வைத்துள்ளோம். அதே போல் இந்து சமுதாய மக்களுக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளோம். நிறுவனத்தின் சார்பில் ஏழை எளிய மக்கள் கணவனை இழந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் தீபாவளி பொங்கல் ரம்ஜான் கிறிஸ்மஸ் பண்டிகை காலங்களில் அரிசி மளிகை சாமான்களும் சமத்துவ முறையில் வழங்கி வருகிறோம் எனக் கூறினார்.