• Wed. Feb 19th, 2025

ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை…

Byகாயத்ரி

May 17, 2022

மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டுவருகிறது. ப.சிதம்பரத்தின் மகனும் சிவங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.