விளம்பரம் செய்தால் சான்றிதழ்கள் தரப்படும் என்று மாணவர்கள் குற்றச்சாட்டு..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கோட்டுச்சேரி பகுதியில் இயங்கி வரும் தனியார் செவிலியர் கல்லூரி அறுவை சிகிச்சை பிரிவில் படித்து முடித்த 17 மாணவர்களுக்கு மதிப்பின் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை மூன்று மாதங்களாக கல்லூரி நிர்வாகம் வழங்காமல் உள்ளதால்…
“வந்தே மாதரம்” பாடல் 150 ஆண்டுகள் சிறப்பு விழா…,
“வந்தே மாதரம்” பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவு பெறும் சிறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் வந்தே மாதரம் பாடலை பாடி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் பாஜக மகளிர் அணி…
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,
காரைக்கால் தலைமை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை புதுச்சேரி அரசு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…
மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளதாக தகவல்..,
திருநள்ளாறில் மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படவுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் தெரிவித்துள்ளார். புகழ் பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி கொண்டு அமைந்துள்ள ஸ்ரீசனீஸ்வரபகவானை தரிசனம் செய்ய உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள்…
உயிருக்கு போராடிய குதிரையை மீட்ட தீயணைப்பு துறையினர்..,
காரைக்கால் நகர பகுதியில் நூல் கடைவீதியில் குதிரை ஒன்று வீட்டு வாசலில் படிக்கட்டு அடி செல்லும் கழிவு நீர் சாலவத்தில் உணவுக்காக தலை அடியில் விட்ட போது சிக்கி மாட்டிக்கொண்டது. இதனால் கழிவு நீர் சாலவம் அடியில் தலையும் வயிற்றுப் பகுதியில்…
பசுபதீஸ்வரர் கோயிலில் உண்டியல் திருட்டு..,
திருப்பட்டினம் பகுதி பசுபதீஸ்வரர் கோயிலில் கடந்த அக். 28-ஆம் தேதி இரவு உண்டியல் திருடுபோனது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உண்டியலில் சுமார் ரூ. 15 ஆயிரம் ரொக்கம், ரூ.9,500 மதிப்புள்ள உண்டியல் திருடுபோனதாக தெரிவித்திருந்தனர். காவல்…
சபரிமலைக்கு புனித மாலை அணிந்து விரதத்தை மேற்கொண்ட பக்தர்கள்..,
காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசாஸ்த்தா ஐயப்பன் ஆலயத்தில் கார்த்திகை மாதபிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு சபரிமலைக்கு புனித மாலை அணிந்து விரதத்தை மேற் கொண்டனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த பச்சூரில் அமைந்துள்ள ஸ்ரீதர்மசாஸ்த்தா…
காரைக்காலில் பாஜகவினர் கொண்டாட்டம்..,
பீகார் சட்டமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து காரைக்கால் மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் முருகதாஸ் தலைமையில் புதிய பேருந்து நிலையம் வாயிலில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெற்றியை கொண்டாடினர். இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நிரவி – திருப்பட்டினம் சட்டமன்ற…
இருசக்கர வாகனம் பெற்றோருக்கு கடும் நடவடிக்கை..,
காரைக்கால் மாவட்ட காவல்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது 18 வயதுக்கு குறைவான சிறார்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவது சட்டவிரோதமானது எனவும், இதனை மீறி சிறார்கள் வாகனம் ஓட்டினால், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.…




