• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பேரூராட்சியில் தலைவர் மீது துணைத் தலைவர் சாதி பாகுபாடு..,

ByT.Vasanthkumar

Mar 29, 2025

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சி அலுவலக மாதாந்திர கூட்டத்தை புறக்கணித்து திமுக கட்சியை சேர்ந்த துணைத் தலைவர் செல்வ லட்சுமியை கண்டித்து திமுக தலைவர் பாக்கியலட்சுமி மற்றும் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பேரூராட்சி தலைவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் துணைத்தலைவர் சாதி பாகுபாடு

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது இதில் திமுகவை சேர்ந்த 12 உறுப்பினர்களும், அதிமுகவை சேர்ந்த இரண்டும் உறுப்பினர்களும், ஒருவர் சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளனர்.

பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த பாக்கியலெட்சுமி என்பவர் தலைவராக உள்ளார் இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். பேரூராட்சி துணைத் தலைவராக செல்வ லட்சுமி என்பவர் இருந்து வருகிறார் இவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.

பூலாம்பாடி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சரியான முறையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் 7 வது வார்டு திமுகவை சேர்ந்த பேரூராட்சி கவுன்சிலரும் துணைத் தலைவருமான செல்வலட்சுமி கலந்து கொள்ளவில்லை. தலைவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தலைவரை மதிக்காமல் நேரடியாக எந்த கோரிக்கையும் வைக்காமல் செயல் அலுவலரிடம் மட்டுமே கோரிக்கை வைப்பதாக கூறப்படுகிறது. இதே போல் தலைவர் கூட்டம் மாதாந்திர கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என பல்வேறு புகார்கள் துணைத்தலைவர் மீது கூறப்படுகிறது.

மேலும் வேண்டுமென்றே தனது வார்டு பகுதிக்கு அடிப்படை வசதி செய்யதரவில்லை என கூறி பிரச்சனை செய்து வந்துள்ளார்.

இவரது செயல்பாடு பேரூராட்சி மன்றம் செயல்பாட்டுக்கும், ஆளும் கட்சியான திமுகவிற்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என கூறி பேரூராட்சி தலைவர் மற்றும் திமுக கவுன்சிலர்கள் செல்வலட்சுமியை கண்டித்து இன்று மாலை நடந்த பேரூராட்சி கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர்கள் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்ததால் பரப்பரபு எற்பட்டது.

ஆளும் திமுக கட்சிக்குள்ளேயே பேரூராட்சி தலைவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த துணைத் தலைவர் சாதி பாகுபாடு பார்ப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.