• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்கு

ஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை அடித்து சேதப்படுத்தி நொறுக்கினர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் பகுதியைச் சேர்ந்த டாக்டர் தம்பதிகளான ஆனந்தபாபு – பரமேஸ்வரி குடும்பத்துடன் வாரியங்காவல் நாகல்குழி ரோட்டுப் பகுதியில். வீடு கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். கோடை விடுமுறையை முன்னிட்டு டாக்டர் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ள நிலையில். டாக்டர் பரமேஸ்வரியின் பெரியப்பாவான அதே பகுதியை அண்ணாதுரை அவரது மகன் ஹரிஹரசுதன், உறவினரான  விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் உட்பட பலர் ஒன்று சேர்ந்து டாக்டர் தம்பதியின் வீட்டின் கம்பி வேலி இரண்டு சிமிட் சீட் கொட்டகைகள் உட்பட சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேலான அசையா சொத்துக்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து  வாரியங்காவல் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்த சிங்காரு மகன் பாலசுப்பிரமணியன் தனது அண்ணன் அவரது மகன் உறவினர்கள் உட்பட சேதப்படுத்தியவர்கள் குறித்து ஜெயங்கொண்டம் போலீசில் புகார் அளித்ததின் பேரில். இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத் வழக்கு பதிவு செய்து அண்ணாதுரை, ஹரிஹரசுதன், சுப்பிரமணியன் உட்பட பலரைத் தேடி விசாரித்து வருகின்றனர்.