கன்னியாகுமரி ஒரு சர்வதேச சுற்றுலா பகுதி. கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம்,முக்கடல்
சங்கமத்தில் புனித நீராடல். கடலில் படகு பயணம் மூலம்,வான் உயர் திருவள்ளுவர் சிலை, இரண்டு பாறைகளுக்கு இடையே உள்ள கடல் மேற்பரப்பில் கண்ணாடிப் பாலம்,
சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம். இவையெல்லாம் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பகுதிகளை கடந்து.

வ ட்டக்கோட்டை,குமரி மாவட்டத்தில் உள்ள. சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில்,மாவட்டத்தின் தலைநகருக்கு, நாகர்கோவில் என பெயர் வரக் காரணமான நாகராஜா கோயிலில், குமரியின் குற்றலாம் என புகழப்படும் திற்பரப்பு அருவி, திருவிதாங்கூர் ஆட்சி நடத்திய பத்மநாபபுரம் அரண்மனை, தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்த போது. விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கண்ட இரண்டு மலைகளை இணைத்து கட்டப்பட்ட நீரோடை,தொட்டி வடிவிலான நீளமான
பாலம் மாத்தூர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதால். மாத்தூர் ஊரின் பெயரை இணைத்து தொட்டிப்பாலம். இவை எல்லாம் குமரி வரும் சுற்றுலா பயணிகள் காணச் செல்லும் இடங்கள்.
திருப்பூரை சேர்ந்த காரில் சுற்றுலா வந்த குடும்பத்தினர். மாத்தூரில் வாகனங்களை நிறுத்தி விட்டு,தொட்டிப் பாலத்தை பார்த்தப் பின் தொட்டிப் பாலம் அருகே, தடுப்புச் சுவர் இல்லாத பகுதியில் காரை நிறுத்தி இருந்த நிலையில்.

ஓட்டுநர் மட்டுமே காரை எடுக்க காரை பின்னோக்கி ஓட்டிய போது கார் கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்தது. காரில் ஓட்டுநர் மட்டுமே இருந்த நிலையில், ஓட்டுநர் காயங்களுடன் மீட்கபட்டார்.