கரூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பணிகளை துரிதப்படுத்ததுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கார் விற்பனையாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட கார் விற்பனையாளர்கள் மற்றும் ஆலோசகர் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
அஞ்சல் மூலம் வாகன பதிவு புத்தகங்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும், ஸ்மார்ட் கார்டு தட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களாக எழுப்பினர்.