திட்டக்குடி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் சென்ற கார் தீ பிடித்து எரிந்து அதிஷ்டவசமாக அதில் பயணம் செய்த 4பேரும் உயிர் தப்பினர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜா வயது 36 இவர் கள்ளக்குறிச்சியில் சிட்டி யூனியன் பேங்கில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவருடன் வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் வயது 27 அருண்குமார் வயசு 25 கேசவன் வயது 26 ஆகிய 4 பேரும் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக திட்டக்குடியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி காரில் செல்லும் பொழுது ஆவட்டி கூட்டு ரோட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மீது வாகனம் செல்லும் பொழுது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவில் உள்ள தடுப்பு கட்டையில் மோதி சாலையின் மறுபுறம் சென்று பாலத்தின் மதில் சுவற்றில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது அதிர்ஷ்டவசமாக நான்கு பேரும் உயிர் தப்பினர் தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு வந்த வேப்பூர் தீயணைப்பு துறையினர் தீயை பரவாமல் அணைத்தனர் . இச் சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
