கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர், பகுதியில் நேற்று இரவு, சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளம் பெண் பஸ் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஒரு இளைஞன் அப்பெண்ணை தொட்டு, சில்மிஸ வேளையில், ஈடுபட அப்பெண் அந்த இளைஞனை துரத்தி சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.

இது மட்டுமில்லாமல் இத்தகவல் அறிந்த அருகில் இருந்த இளைஞர்கள் அந்த வாலிபனை சரபரியாக தாக்கியம் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவும் நிலையில், ஒரு பெண் நடந்து செல்ல கூட அச்சுறுத்தலாக உள்ளதாகவும், இந்நிலை மாற அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் எனவும் சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.