காஷ்மீரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணம் செய்த 26 ஏப்ரல் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தீவிரவாத தாக்குதலில் இருந்த 26 நபர்களின் ஆன்மா சாந்தி அடைய புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் மாநகர பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
பாஜகவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் தீவிரவாத தாக்குதலில் இறந்த நபர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.