• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

5, 8 ஆம் வகுப்புகளுக்கு ஆல் பாஸ் முறை ரத்து

Byவிஷா

Dec 24, 2024

மத்திய அரசு பள்ளிகளில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி (ஆல்;;;;;;;;;;;;;;;; பாஸ்) முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சம் தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் பயலும் மாணவர்கள் கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில், இந்த நடைமுறையை ரத்து செய்வதாக அறிவித்துள்ள மத்திய கல்வி அமைச்சகம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு 2 மாதங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் எனவும், துணைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை மேல் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. துணைத் தேர்விலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படித்து தேர்ச்சி பெற வேண்டும் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.