• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மீண்டும் நிர்வாணமாக நடிக்க ரன்வீர் சிங்கிற்கு அழைப்பு..!!

Byகாயத்ரி

Aug 6, 2022

பாலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சில நாட்களுக்கு முன் ரன்வீர்சிங் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அவரது நிர்வாணப் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ரன்வீர் சிங் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி தொண்டு நிறுவனம் அளித்த புகாரின்படி மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அண்மையில் டெல்லியிலுள்ள இந்தூரில் ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவருக்கு ஆடைகள் நன்கொடையாக அனுப்பும் போராட்டத்தை தொண்டு நிறுவனம் நடத்தியது. அத்துடன் அவரது நிர்வாணப் புகைப்படத்துக்கு பலர் ஆதரவும் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரபல நிறுவனம் ஒன்று அவரிடம் மீண்டுமாக நிர்வாணமாக நடிக்க அழைப்புவிடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பீட்டா அமைப்பு தங்களது பிரச்சாரத்துக்காக நிர்வாணமாக போஸ்கொடுக்கும்படி ரன்வீர் சிங்கிற்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி சமூகவலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.