தமிழர்களின் கலாச்சாரத்தில் கலந்துவிட்ட நாட்காட்டியான காலண்டர் உற்பத்தியில் முன்னணியாகத் திகழும் குட்டி ஜப்பான் என1 அழைக்கப்படும் சிவகாசியில், 2026-ம் ஆங்கிலப் புத்தாண்டிற்கான காலண்டர்களின் தயாரிப்பு பல்வேறு சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் விதத்தில் தினசரிக் காலண்டர் பல்வேறு புதிய வடிவில் உற்பத்தியாகி அறிமுகப்படுத்தி விற்பனைக்காக வெளிவந்துள்ளது.

15 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான 300க்கும் மேற்பட்ட வடிவங்களில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள “பொற்காலம்” என்ற காலண்டர்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காலண்டர் உற்பத்திக்கான காகிதம், அட்டை போன்ற மூலப் பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் விலையேற்றமின்றி கட்டுப்பாட்டி லிருந்தாலும், மின் கட்டணம் மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு போன்ற காரணங்களால் காலண்டர் உற்பத்தி விலையில் 7- சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளதாகவும், காலண்டருக்கான 12 சதவீத ஜிஎஸ்டி வரி சமீபத்தில் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால் 5 சதவீதமாக குறைக்க காலண்டர் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


இதனிடையே எதிர்வரும் 2026 – சட்டமன்றத் தேர்தலுக்கான காலகட்டத்தில் அரசியல் கட்சிகளின் காலண்டர் தேவை கூடுதலாயிருக்கு மென்பதால் அதிகமான அளவு காலண்டர் ஆர்டர் வருமென எதிர்பார்ப்பதாகவும், தைப்பொங்கல் வரை காலண்டர் உற்பத்தி வழக்கம் போல நடந்து வந்த நிலையில், புதிதாக பல்வேறு அரசியல் கட்சிகள் களத்தில் உதயமாகியுள்ளதால் அதிகப்படியான காலண்டர் ஆர்டர்கள் மென்மேலும் கிடைக்கப்பெற்று ஜனவரி மாதம் முழுவதும் காலண்டர் உற்பத்திக்கான பணிகள் நடைபெறும் என்ற நம்பிக்கையோடு உள்ளதாக உற்பத்தியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.




