புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் விளக்கு ரோடு அரசு மருத்துவக் கல்லூரி அருகில் எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் காயம் அடைந்து சாலை ஓரத்தில் வயதான மூதாட்டி கிடந்தார்.

அந்த வழியாக தஞ்சாவூரில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் புரட்சித்தமிழரின் எழுச்சி பயணம் முடித்துக் கொண்டு புதுக்கோட்டை திரும்பும் வழியில் அந்த பாட்டியை கண்ட முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பிருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் மற்றும் சிவகங்கை தொகுதி Mla செந்தில்நாதன் ஆகியோர் விபத்தில் சிக்கிய பாட்டிக்கு உடனே முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு தன் வாகனத்தில் அழைத்துச் சென்று அட்மிஷன் போட்டு மருத்துவர்களை நேரில் சந்தித்து உரிய மருத்துவம் வழங்கும் படி அறிவுறுத்தினார்.

விபத்தில் சிக்கிய அடையாளம் தெரியாத ஒரு வயதான மூதாட்டியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த நிகழ்வின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் உடனிருந்தனர்.