அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சார்ந்தவர்
சி கிருஷ்ணமூர்த்தி ஆவார் . இவர் சட்டத்துறையில் பிரிவு அலுவலர் பதவியில் இருந்து, பதவி உயர்வு பெற்று , சட்டத்துறை சார்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் சட்டம் படித்தவர் ,TNPSC மூலம் 2013 ல் VAO ஆக அரியலூர் மாவட்டதில் பணியில் சேர்ந்தார்.தொடர்ந்து TNPSC குரூப் 2 மூலம் 2015 ல் தலைமைச் செயலகம் சட்டத் துறையில் Assistant Section Officer ஆகபணியில்சேர்ந்தார்.2018ல்சட்டத்துறையில் (Section Officer )பிரிவு அலுவலர் ஆக பதவி உயர்வுபெற்றார்.இந்நிலையில் தற்போது அவர் வீட்டு வசதி துறை அமைச்சர் சு .முத்துசாமியின் நேர்முகஉதவியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தலைமைச் செயலகம் சட்டத் துறையில் அரசு சார்பு செயலாளராக பதவி உயர்வு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு வழங்கியுள்ளது.தனது பதவி உயர்வுக்கான உத்தரவை, சார்பு செயலாளர் சி. கிருஷ்ணமூர்த்தி,
சட்டத்துறை செயலாளர் எஸ் ஜார்ஜ் அலெக்சாண்டரிடம் காண்பித்து , வாழ்த்து பெற்றார்.




