• Fri. Apr 26th, 2024

இடிந்து விழும் நிலையில் பேருந்து நிறுத்தம்

Byகுமார்

Jun 23, 2022

மதுரை காமராஜர் சாலையில உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் அருகே பேருந்து நிறுத்தம் இருக்கிறது. இந்தப் பேருந்து நிறுத்தத்தை தினமும் ஆயிரக்கணக்கான மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்,
பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் வாசல் அருகே உள்ள இந்த பேருந்து நிறுத்தம் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.
இந்தப் பேருந்து நிறுத்தம் பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் இருக்கிறது. கூரைகளிலிருந்து கான்கிரீட் உதிர்ந்து, துருப்பிடித்த கம்பிகள் நீண்டு நிற்கின்றன. எந்தக் கணம் வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் இருக்கிறது,
திருப்புவனம், சிலைமான், விரகனூர், மாட்டுத்தாவணி, ஆகிய பகுதிகளில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.பேருந்து நிறுத்தம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மதில் சுவருடன் ஒட்டி அமைந்துள்ளது.பேருந்து நிலையத்தின் நிலை குறித்து பலமுறை மாநகராட்சியிடம் புகார் கூறியும் பேருந்து நிறுத்தத்தை சீரமைக்கவோ இடிக்கவோ மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. அதை பயன்படுத்தும் மாணவிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் மாணவிகளிடம் சற்று தள்ளி நின்று பேருந்தில் ஏறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது,

பருவமழை காலம் ஆரம்பம் ஆகும் முன் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, தினமும் ஆயிரக்கணக்கான மாணவிகளும் பொதுமக்களும் பயன்படுத்தி வரும் சிதிலமடைந்த பேருந்து நிறுத்தம் இடிந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் இடித்துத் தள்ள வேண்டும். மேலும் புதிதாக பேருந்து நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்பது மாணவிகள் மற்றும் அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *