சிவகாசி அருகே பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி வெள்ளி விழாவில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டார்.
சிவகாசி அருகே உள்ள பி .எஸ் .ஆர். கல்வி குழுமங்களில் வெள்ளிவிழா கொண்டாட்டம் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் ஆர். சோலைச்சாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குனர்கள் டாக்டர் அருண் குமார், விக்னேஸ்வரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். கல்லூரியின் டீன் மாரிச்சாமி வாழ்த்தி பேசினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக டெல்லி உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் கலந்து கொண்டு பேசியது..,
அனைவருக்கும் கல்வி வழங்கும் கல்வி நிறுவனங்களை அமைப்பதன் மூலம் நமது நாட்டை உயர்த்த முடியும். நழுவ விட்ட நேரம், தவறவிட்ட வாய்ப்பு, பேசிய வார்த்தைகள் ஆகிய மூன்று தாரக மந்திரங்களை கடைப்பிடித்தால் மாணவர்கள் வாழ்வில் முன்னேற முடியும். நாம் தற்போது இருக்கும் காலம் விரைவாக நகர்ந்து செல்லக்கூடியது. காலம் பொன் போன்றது. தவறவிட்ட காலங்களை மீண்டும் இந்த உலகத்தில் எவருக்குமே கிடைக்காது. கடந்து விட்ட காலம் உங்கள் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிவிடும்.
மாணவர்கள் எண்ணங்களை சிதறவிடாமல் வரும் வாய்ப்பை ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடிக்காமல் முன்னேற வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகில் தொடர்ந்து கல்வி கற்றால் மட்டுமே வாழ்க்கை அடுத்த இடத்திற்கு சென்று வெற்றி பெற முடியும் . வாழ்வில் பெரிய சாதனையாக உள்ள அனைவருமே அரசு பள்ளி இல் தான் படித்துள்ளனர். அதனை அதன் மூலம் கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்தி வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும். நான் கடந்த 27 ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றினேன். பத்து ஆண்டுகள் அரசு வழக்கறிஞராக பணியாற்றினார். பதினோராயிரம் பல்கலை நடத்தியுள்ளேன். உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி உள்ளேன். தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருகிறேன். தமிழ் படித்த என்னால் இந்த உயரத்தை தொட முடியும் என்றால், நீங்களும் இன்னும் பல்வேறு சாதனைகளை செய்யலாம். மாணவர்களின் கவனத்தை திசை திருப்ப பல்வேறு காரணிகளை தற்போது இருக்கின்றனர். ஆனால் அவைகளை எல்லாம் நீங்கள் தவிர்த்து, கடந்து வாழ்க்கையில் முன்னேற தேவையானதை செய்ய வேண்டிய பணிகள் குறித்து, முன்பே திட்டமிட்டு கொள்ள வேண்டும். தமிழகத்திலிருந்து சித்த மருத்துவக் கூறுகளை, வெளிநாட்டு அறிஞர்களால் எடுத்து ஆளப்பட்டு அவர்கள் மூலமாக மருத்துவர் துறையில் கலந்துள்ளது, நாம் படிக்கும் சிந்தனைகள் தத்துவங்கள் அனைத்தும் மேல்நாட்டு அறிஞர்கள் கூறியது என நினைக்கின்றனர். ஆனால் பெரும்பாலானவை நம் இந்திய மண்ணில் இருந்து சென்றவைதான் என கூறினார்.
எதிர்கால வாழ்க்கை எளிதானது அல்ல. வேகமாக செல்லும் இந்த வாழ்க்கையில் எதற்கும் கவலைப்பட வேண்டாம். ஆங்கிலத்தில் நன்கு கற்றுக் கொள்ளலாம். அதே நேரத்தில் கற்க வேண்டிய காலத்தில் கற்க வேண்டியதை கற்க வேண்டும். எதிர்வரும் நாட்கள் உங்களுக்கு அற்புதமாக அதன் மூலம் அமையும். அதனை நீங்கள் பயன்படுத்தி வெற்றிகரமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறினார்.
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குனர் ராதாகிருஷ்ணன் பேசியது..,
மனிதன் கல்வி என்றால் மட்டுமே அடிமைத்தனத்திலிருந்து மீண்டும் சுதந்திரமான வாழ்க்கை வாழ முடியும். கல்வி அறிவு இருந்தால் தான் நமக்கு மரியாதை என்று கூறிய பாரதியார், திருவள்ளுவர் கூற்றுக்கு தகுந்தார் போன்று, தற்போது வீதியில் தோறும் பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள், இருப்பதால் தனி மனிதனின் வருமானம் உயர்ந்து வருகிறது. மனித வளக் குறியீட்டில் விருதுநகர் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத் தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார். மேலும் கல்லூரிக்கு விடுமுறை எடுக்காமல் வருகை புரிந்த மாணவர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு துறையிலும் சிறந்த மாணவருக்கான விருதுகள் வழங்கப்பட்டன மேலும், டி என் எஸ் சி எஸ் டி, டி எஸ் டி ,தமிழக அரசின் நான் முதல்வன் உள்ளிட்ட மத்திய, மாநில, அரசின் நிதி அமைப்புகளிடமிருந்து நிதி உதவி பெற்ற பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் சிறந்த ஆய்வு கட்டுரை வெளியிட்ட பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தேசிய மாணவர் படை இளைஞர் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க அமைப்புகள் சேர்ந்த மாணவர்களுக்கும், சிறந்த செயலாற்றிய மாணவர்களுக்கும் தன்னார்வ தொண்டு விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து மாணவ, மாணவியர்கள் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.