கன்னியாகுமரியில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
விவேகானந்தபுரத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் காந்தி மண்டபம் வரை சென்று அங்கிருந்து திரும்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்திகளை பரப்பியது.
குலசேகரம் மூகாம்பிகை மருத்துவ கல்லூரி சார்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு, பெருமளவில் மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு விளம்பர பதாகைகள், விழிப்புணர்வு கோஷங்கள் மூலம் மக்களுக்கு தகவல் பரப்பினர்.

ஊர்வலத்தை கன்னியாகுமரி டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி ஹோட்டல் சங்கம் குரூப்ஸ் நிர்வாக இயக்குநர் கோபாலகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.













; ?>)
; ?>)
; ?>)