• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பூர் அருகே சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர் அருகே பெருமாநல்லூரில், செல்போனில் ‘ப்ரீபயர்’ விளையாடிய சிறுவன் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.


திருப்பூர் அடுத்துள்ள, பெருமாநல்லூர் அருகே தொரவலூரை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் கண்ணன். எட்டாம் வகுப்பு படித்து வருகிறான்.

கண்ணன் செல்போனில் ‘ப்ரீபயர்’ விளையாட்டில் அதிகளவில் ஆர்வம் கொண்டவர். இந்நிலையில் ஊரடங்கால் பள்ளி செல்லாமல் இருந்த அவர் தொடர்ச்சியாக ப்ரீபயர் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது வீட்டில் செல்போனில் ப்ரீபயர் விளையாடி கொண்டிருந்த கண்ணன், திடீரென அறைக்குள் சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டான்.

இதனையடுத்து கண்ணனை மருத்துவமனை சென்று பரிசோதனை செய்ததில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த பெருமாநல்லூர் போலீசார் சிறுவனின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ப்ரீபயர் விளையாடியதால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக சிறுவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.