இங்கிலாந்து நாட்டிற்கும் பிரான்ஸ் இருக்கும் இடையே உள்ள இங்கிலீஷ் கால்வாய் கடல் பகுதியை சென்னையைச் சார்ந்த 14 வயது பள்ளி சிறுவன் அகிலேஷ் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்ட மிகவும் குளிர்ந்த நீரில் 42 கிலோமீட்டர் நீளத்தை 12 மணி நேரம் 10 நிமிடங்கள் இடைவிடாது 6 பேர் இணைந்து குழுவாக நீந்தினர் இந்தக் குழுவில் மிக இளம் வயதை கொண்ட அகிலேஷ் பங்கேற்று கடலை நீந்தியுள்ளார்..
இது குறித்த செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் மற்றும் அவரது பயிற்சியாளர்கள் செய்தியாளர்களிடம் பேசிய போது

தமிழகத்தைச் சார்ந்த இளம் வயதுடைய சிறுவனாக இந்த கால்வாயை கடந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது அங்கு இருக்கும் 16 டிகிரி செல்சியஸ் சீதோசன நிலைக்கு ஏற்றவாறு சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டதாகவும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பயிற்சி மேற்கொண்டு இந்த சாதனையை செய்ய முடிந்ததாகவும் தெரிவித்தார்.