• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சி மையம் திறப்பு – ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்

ByT.Vasanthkumar

May 6, 2025

தமிழ்நாடு துணை முதலமைச்சர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், இயங்கிவரும் 38 மாவட்டங்களிலும் “SDAT –ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தை சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கிலிருந்து திறந்து வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஸ்டார் அகாடமி குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் குத்து விளக்கு ஏற்றி, ஸ்டார் அகாடமி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு விளையாட்டு சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கிவரும் 38 மாவட்டங்களிலும் “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தை சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் திறந்து வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட பாரத ரத்னா டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் உள்ள பல்நோக்கு உள் விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் குத்து விளக்கேற்றி வைத்து, குத்துச்சண்டை பயிற்சி பெறவுள்ள விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு விளையாட்டு சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

பெரம்பலுார் மாவட்டத்தில் ஸ்டார் குத்துச்சண்டை அகாடமிக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் தேர்வுக்குழு உறுப்பினர்களைக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட குத்துச் சண்டை பயிற்றுநருக்கு ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும் பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலமாக குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் பயிற்சிக்கு சேர்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 20 வீரர்கள் மற்றும் 20 வீராங்கனைகளுக்கு குத்துச்சண்டை பயிற்சி தொடங்கப்பட்டதை மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டனர்.
மேலும், மாவட்ட பல்நோக்கு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ள ஸ்டார் குத்துச்சண்டை அகாடமியில் பயிற்சிபெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தினசரி காலை, மாலை உயரிய தரத்திலான பயிற்சிகள், சத்தான உணவுகள், விளையாட்டு சீருடைகள், விளையாட்டு காலணிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக துணை முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டை விளையாட்டில் முதன்மையான மாநிலமாக உருவாக்குவதுடன் தனிநபர்களுக்கு விளையாட்டுகளை முழுதிறனுடன் அணுகவும், அவர்கள் உயர்மட்ட போட்டிகளில் பங்கு பெற்று சிறப்படையவும் வாய்ப்புகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்குகிறது. தமிழ்நாடு அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் நலனின் மேம்பாட்டில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு பல்வேறு திட்டங்களுக்கு தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

பெரம்பலுார் ஸ்டார் குத்துச்சண்டை அகாடமிக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் உயரிய தரத்திலான விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையத்தினை பயன்படுத்தி தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் இரா. பொற்கொடி வாசுதேவன், தடகள பயிற்றுநர் செல்வி. மோகனா, டேக்வாண்டோ பயிற்றுநர் து.பரணிதேவி மற்றும் அரசுஅலுவலர்கள், விளையாட்டு வீரர் வீராங்கனைகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.