விருதுநகர் மாவட்டம் சிவகாசி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காக்கி வாடான்பட்டி, எம்.துரைச்சாமிபுரம், மாரனேரி உள்ளிட்ட பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

சிவகாசி சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர் பலராமன் தலைமை வகித்தார்.தெற்கு ஒன்றிய செயலாளர் பாலாஜி முன்னிலை
வகித்தார் . சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான் மகேந்திரன் கலந்து கொண்டனர். பூத்து கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி பேசியது,
முதலமைச்சர் ஸ்டாலின் விடியல் ஆட்சி என சொல்லி ஆட்சிக்கு வந்த பின்பு விடியாத ஆட்சியாக மக்களுக்கு தந்துள்ளார். வேலையின்மை அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் இளம் பெண்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அடுத்த ஆண்டு இதே நேரத்தில் திமுக ஆட்சி முடிந்துவிடும். அதிமுக ஆட்சி பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடியார் அம்மா வழியில் சிறப்புற ஆட்சி நடத்துவார்.
பூத் கமிட்டி கூட்டத்தில் நள்ளிரவு நேரங்களிலும் மின்சாரம் தடைபட்டிருந்தாலும் நிகழ்ச்சியில் இளம் பெண்கள், இளைஞர்கள் , ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர் .இதனை பார்க்கும்போது இளம் தலைமுறை அதிமுக க்கு ஆதரவு உள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. வரும் தேர்தல் அதிமுக தலைமையிலான அரசியல் மாற்றம் வரும் என கே. டி. ராஜேந்திர பாலாஜி கூறினார்.