• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் – ஆர்.பி.உதயகுமார் சிறப்புரை…

ByKalamegam Viswanathan

Apr 18, 2025

அதிமுக சார்பில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளை கழகங்களில் நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் ஆர் பி உதயகுமார் சிறப்புரை ஆற்றினார்.

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் குருவித்துறை காடுபட்டி முள்ளிப்பள்ளம் தென்கரை உள்ளிட்ட கிளைக் கழகங்களில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். பூத் கமிட்டியில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள், எம். வி. கருப்பையா, மாணிக்கம் மகளிர் அணி மாவட்ட செயலாளர் லெட்சுமி, முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், செல்லம்பட்டி எம். வி. பி. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலைப்பிரிவு மாவட்டச் செயலாளர் சிவசக்தி அம்மா பேரவை மாநில நிர்வாகி துரை தன்ராஜ் புளியங்குளம் ராமகிருஷ்ணன் வக்கீல் திருப்பதி இலக்கிய அணி ரகு பொதுக்குழு நாகராஜ் மன்னாடிமங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி கல்லாங்காடு ராமு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் காடுப்பட்டி சிவகுமார், கருப்பட்டி தங்கப்பாண்டி, முள்ளிப்பள்ளம் பாண்டியம்மாள் தென்கரை ராமலிங்கம், கிளைச் செயலாளர்கள் சேது முருகன், ஜெயக்குமார் குருவித்துறை வனிதா, வழக்கறிஞர் காசிநாதன், தென்கரை நாகமணி, விஜயபாபு, தண்டாயுதம், சோழவந்தான் பத்தாவது வார்டு மணிகண்டன், பிஆர்சி நாகராஜ் அண்ணா தொழிற்சங்கம் சக்திவேல், மட்டையான், ராமு உள்பட பாலர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.