• Sun. May 12th, 2024

அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்.., முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் சிறப்புரை…

ByKalamegam Viswanathan

Aug 31, 2023

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தானில் அதிமுக பூத்து கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கருப்பையா மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் முருகேசன் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு நாகராஜ், முன்னாள் சேர்மன் எம். கே. முருகேசன் மாவட்ட நிர்வாகிகள் திருப்பதி, ஆர்யா, சிங்கராஜ பாண்டியன், மகேந்திர பாண்டிலட்சுமி ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதுரை புறநகர்மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி. உதயகுமார் சிறப்புரையாற்றி பேசினார். இதில் வரும் 2024ல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வெற்றிக்கனியை கழகத்தின் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை தொடர்ந்து திமுகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக்க வேண்டும். உள்ளிட்டவை குறித்து நிர்வாகிகளிடம் சிறப்புரையாற்றி பேசினார். இதில் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கபாண்டி, நாச்சிகுளம் தங்கப்பாண்டி மற்றும் சோழவந்தான் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன் சண்முக பாண்டியராஜா, சரண்யா கண்ணன் கச்சிராயிருப்பு முனியாண்டி, சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி, மருத்துவரணி கருப்பட்டி தங்கப்பாண்டி, பேரூர் துணைச் செயலாளர் தியாகு 5 வார்டு அசோக், 10 வது வார்டு செயலாளர் மணிகண்டன், 2வது வார்டுமருது சேது துரை கண்ணன், ஜெயபிரகாஷ் சிவா செழியன், மன்னாடி மங்கலம் ராஜபாண்டி ராமு மேலக்கால் காசிலிங்கம் குருவித்துறை பாபு ஜூஸ் கடை கென்னடி பேட்டை பாலா முள்ளிப்பள்ளம் சேது மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் கழக வார்டு நிர்வாகிகள் உறுப்பினர்கள் அதிமுக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *