• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூரில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

ByKalamegam Viswanathan

Dec 3, 2023

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக்கடை தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் இரா. கோடீஸ்வரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜபிரபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரும் வடக்கு மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் கழக அம்மா பேரவை செயலாளரும் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான டேவிட் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு கிளை வாரியாக பூத் கமிட்டி அமைப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் டிடிவி தினகரன் தேனி பாராளுமன்றத்திற்கு யாரை வேட்பாளராக கை காட்டுகிறாரோ அவருக்கு அயராது பாடுபட்டு மகத்தான வெற்றியினை தேடித் தர வேண்டும் என்று கூறினர். இதில் நிர்வாகிகள் ஒன்றிய கழக செயலாளர்கள் ரகு, ராஜன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் செல்வகுமார், பேரூர் செயலாளர்கள் மதன், திரவியம், முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன், முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் வீரமாரி பாண்டியன், முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பாலு, மாவட்ட இணைச்செயலாளர் சுமதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் இளஞ்செழியன், சித்ரா, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், தகவல் தொழில் நுட்ப அணி ரிஷபம் ரஜினி பிரபுமற்றும் நிர்வாகிகள் முனைவர் பாலு வக்கீல் சந்திரசேகரன் வேல்முருகன், பண்ணகுடி அசோக், நீதி, சங்கையா, சோழவந்தான் மீனாட்சி ரபீக்.சுந்தர் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.