நாட்டிய சிறகுகள் கலைக்கூடம் சார்பில், ஆசிரியை ஜீவா ஜாக்லின் தலைமையில் மகுடம் சூடிய மகளிர் நிகழ்ச்சி, தூக்குவாளி நூல் வெளியீட்டு விழா, பாரதிதாசன் பிறந்தநாள் தமிழ் வார விழா, நாட்டிய சிறகுகள் கலைக்கூட ஆண்டுவிழா, அன்னையர் தினவிழா என ஐம்பெரும் விழாவாக நடைபெற்ற இவ்விழாவில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கடலூர் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், லயன்ஸ் உமாசங்கர் ஆகிய கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகுடம் சூடி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து தூக்குவாளி எனும் நூலை மேயர் சுந்தரி ராஜா, கடலூர் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ், லயன்ஸ் உமாசங்கர் ஆகியோர் வெளியிட்டனர். அப்போது அவர்கள் தூக்குவாளியை கையில் ஏந்தி நூலை வெளியிட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.














; ?>)
; ?>)
; ?>)