

ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் ‘வலிமை’ திரைப்படம் இம்மாதம் 24 ஆம் தேதி ரிலீஸாகிறது. படத்தை தயாரித்துள்ள போனி கபூர் தனது மனைவி ஸ்ரீதேவி மறைந்த நாளில் இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். தமிழ்நாடு முழுவதும் இப்படத்துக்காக தியேட்டர்கள் புக் செய்யப்பட்டு, ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். முதல் நாள் முதல் ஷோவை பார்க்க வேண்டும் என ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்கள், வலிமை நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என அடித்து சொல்லுகின்றனர்.
தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வலிமை ரிலீஸ் செய்யப்படுகிறது. போலீஸாக நடித்திருக்கும் அஜித், படத்தில் டூப் இல்லாமல் அவரே பைக் சேஸிங் சீன்களில் நடித்துள்ளார். இந்நிலையில், வலிமை குறித்து பேசிய தயாரிப்பாளர் போனிக் கபூர், வலிமை படம் தரமாக தயாராகி இருப்பதாகவும், ஆக்ஷனுக்கு குறைவிருக்காது என கூறியுள்ளார்.
இயக்குநர் ஹெச்.வினோத்தை பாராட்டியுள்ள அவர், சேஸிங் சீன்கள் மிகச்சிறப்பாக இருப்பதாகவும், படத்தின் ஸ்டார் போர்ஷனாக அந்தக் காட்சிகள் இருக்கும் என கூறியுள்ளார். போலீஸ் கெட்டப்பில் அஜித் மிரட்டியிருப்பதாகவும் கூறியிருக்கிறார் போனிகபூர். வலிமை வெளியாக 13 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ரசிகர்கள் இப்போதே படத்துக்கான கவுண்டவுனை ஸ்டார்ட் செய்துள்ளனர். மதுரையில் பெரும்பாலான தியேட்டர்களில் வலிமை படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், வசூலிலும் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.