• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல்.. 20 பேர் உயிரிழந்த சோகம் !!

ஆப்கானிஸ்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் வெளியேறின. அதன்பின்னர் அங்கு தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர்.

ஆப்கானிஸ்தானில் மிகக் கடுமையான சட்டங்களை பின்பற்றி வரும் தலீபான்கள், இதுவரை பெண் கல்வியை அங்கீகரிக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குபகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடம் அருகே அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, இன்று காலை மேற்கு காபூலில் உள்ள அப்துல் ரஹீம் சாஹித் உயர்நிலைப் பள்ளி வளாகத்தின் அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் தலிபான் படைகள் சுற்றிவளைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.இந்த தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலின் போது மாணவர்களை குறிவைத்து கிரனேடுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சன்னி மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஆப்கானிஸ்தானில் ஷியா மக்களை குறிவைத்து தாக்குதல் நடைபெறுவது வழக்கம். இந்த தாக்குதலும் ஷியா மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தான் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.