தமிழக வெற்றிக் கழகத்தின் வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக இருப்பவர் சக்திவேல்(35 ).இவருடைய நண்பரான மணிகண்டன் மற்றும் சிலருக்கும் நேற்று கரியாப்பட்டினம் கடைத்தெருவில் தகராறு நடந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சக்திவேல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றாறாம்.

இந்நிலையில் சக்திவேல் இவருக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் உறங்கி கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மர்ம நபர்கள் வீட்டிற்கு பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது.இதில் அவரது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த அவரது பல்சர் இரு சக்கர வாகனம் தீயில் கருகியது.மேலும் வீட்டின் முன்பக்க கதவு எரிந்த நிலையில் வீட்டிலிருந்து பின்பக்கமாக வெளியே ஒடி வந்த சக்திவேல், அவரது தாய், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

மர்ம நபர்கள் எந்த நோக்கில் இச்சம்பவத்தில் ஈடுபட்டரென கரியாப்பட்டினம் காவல் ஆய்வாளர் நாகலெட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.