பெரம்பலூர் மாவட்டம் மதனகோபாலபுரத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் மோகன் என்பவர் பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறத்தில் உள்ள தெப்பக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டு குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கினார். நன்றாக நீச்சல் தெரிந்தும் கூட தெப்பக்குளத்தில் மீன் பிடிப்பிற்காக நிறைய வளையல் போட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மோகனை அக்கம்பக்கத்தினர் பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்து தெப்பக்குளத்தில் நீரில் மூழ்கிய மோகனை பல மணி நேரங்கள் தேடிய பிறகு மோகன் சடலமாக மீட்கப்பட்டார். விடுமுறை நாட்களில் மீன் பிடிக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. சடலத்தை கைப்பற்றி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உடற்குறு ஆய்வுக்காக வைக்கப்பட்டு விசாரணை செய்து வருகிறது.
