சிவகாசி அருகே முட்புதருக்குள் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி சடலம் மீட்க்கப்பட்டது. சடலத்திற்கு அருகே மது பாட்டில்கள் கிடப்பதால் மது போதையில் மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.
சிவகாசியிலிருந்து நாரணாபுரம் செல்லும் சாலையின் அருகே முட்புதற் உள்ளது. அதன் பின்புறம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் கிடப்பதாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிவகாசி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று நடத்திய முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் அதே பகுதியில் பழைய இரும்பு மற்றும் காகித பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்த மூதாட்டி என்பது தெரியவந்தது.
மேலும் மூதாட்டியின் சடலத்திற்கு அருகில் மது பாட்டில்கள், குளிர்பான பாட்டில்,
பணம், ஆண்கள் அணியும் காலணி ஆகியவை கிடந்ததால் பணத்திற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து போலீசார் அருகில் வேற ஏதேனும் தடயங்கள் உள்ளதா என ஆய்வு நடத்தினர். இதையடுத்து மூதாட்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் கொலையா என்பது தெரிய வரும் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)