• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக ரத்த தான முகாம்..,

Byமுகமதி

Dec 20, 2025

புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கறம்பக்குடி கிளை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து மாபெரும் இரத்ததானம் முகாம் இன்று, அரசு மருத்துவ மனையில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இதில் கிளை நிர்வாகிகள் முகமது யூனுஸ், ஜாபிர் அலி ,ஆதம்ஸா ஆகியோர் தலைமை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மழையூர் வட்டார மருத்துவ அலுவலர் பஜ்ருல் அஹமது
கலந்து கொண்டார். இதில் ஆர்வத்துடன் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

மருத்துவ தகுதி அடிப்படையில், 28 யூனிட்கள் இரத்தம் கொடையாக பெறப்பட்டு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இரத்தம் வழங்கிய அனைவருக்கும், அரசு மருத்துவக் கல்லூரி குருதிப் பிரிவு மருத்துவர் சரவணன் சான்றிதழ்களை வழங்கினார்.

இறுதியாக, இம்முகாமில் பங்களிப்பு செய்த, இரத்த வங்கி மருத்துவர் DR.சரவணன் அவர்கள் மற்றும் அவரது குழுவிற்கும், மேலும் இரத்தம் கொடையளித்த, கலந்து கொண்ட பொதுமக்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்த கிளை உறுப்பினர்கள், மாணவரணி, தொண்டரணி மற்றும் கிளை நிர்வாகத்திற்க்கு நன்றியினைத் தெரிவித்தார்.